இந்தத் திட்டம் பற்றி
முதல் நாள் பெய்த கடும் மழையால், மொனராகலை ஜீலோன் தோட்டம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டது.
தோட்டத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 30 வீடுகளில் 16 குடும்பங்கள் கடும் மண்சரிவு அபாயத்தில் உள்ளன. இரண்டு வீடுகள் ஏற்கனவே முற்றாக அழிந்துவிட்டன; மேலும் இரண்டு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அவை தாழ்ந்து வருகின்றன. இதைக் கருத்திற்கொண்டு, உரிய நிறுவனங்களின் பங்களிப்புடனும் அனுசரணையுடனும், இத்தோட்ட மக்களின் பாதுகாப்புக்காக 2026 அக்டோபர் 13 அன்று அனர்த்த முன்னாயத்தப் பயிற்சியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கிராம உத்தியோகத்தர், ஜீலோன் தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோருடன் இணைந்த கூட்டு முயற்சியாக இது வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இது அங்கு வாழும் குடும்பங்களுக்கும் எங்கள் அனைவருக்கும் பெரும் பாக்கியமாகும்.
புகைப்படங்களும் காணொளிகளும்
8 புகைப்படங்கள் · 3 காணொளிகள்